நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி

ஷெஸ்டர்பீல்டு: இந்தியா=நியூசிலாந்து அணிகள் மோதிய பெண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் ஒன்றில் நியூசிலாந்து அணி 26.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 11-வது பெண்கள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 24-ஆம் தேதி முதல் ஜூலை 23-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு வெற்றியாளர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான பயிற்சி ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் ஷெஸ்டர்பீல்டில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் பந்தடித்த இலங்கை அணி, இங்கிலாந்து வீராங்கனைகளின் அபார பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 47.2 ஓவர்களில் 155 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 30.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. முதலில் ஆடிய இந்திய அணி 45.1 ஓவர்களில் 130 ஓட்டங்களில் சுருண்டது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 26.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.2017-06-21 06:00:00 +08002017-06-21 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!