‘இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான நாள்’

புதுடெல்லி: இங்கிலாந்தில் நடந்த வெற்றியாளர் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தா னிடம் தோற்று இந்தியா கிண் ணத்தை இழந்தது. இதனால் இந்திய அணி கடும் விமர்ச னத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலி யாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் பாகிஸ் தானிடம் ஏற்பட்ட தோல்வி இந்தி யாவுக்கு மோசமான நாள் என்று கூறி உள்ளார். “இந்திய அணிக்கு அது மோசமான நாளாக இறுதி ஆட்டம் அமைந்து விட்டது. மிக முக்கிய மான ஆட்டத்தில் அந்த நாள் வந்துவிட்டது. அது நடக்கக் கூடாதுதான். “இந்தியா சேசிங் செய்வதில் திறமையுடன் இருக்கிறது. அதைப் பற்றி நாம் அதிகளவு விமர்சிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். “இறுதி ஆட்டத்தில் சதம் அடித்து பஹார் ஓமான் நோபாலில் கேட்ச் ஆகி தப்பினார். அவர்கள் (பாகிஸ்தான்) இந்தியாவின் வாய்ப் புகளை எடுத்துக் கொண்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்தியாவின் முன்னணி பூப்பந்தாட்ட வீராங்கனை பி.வி.சிந்து. படம்: ஊடகம்

23 Jul 2019

தள்ளிப்போகும் வெற்றியாளர் பட்டம் ஜப்பான் போட்டியில் கிடைக்கும்: சிந்து நம்பிக்கை

இவ்வாண்டு ஏப்ரலில் மான்செஸ்டர் யுனைடெட் பங்கேற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்றில் பால் போக்பா (வலது) கொடுத்த பந்தை வலைக்குள் செலுத்திய மகிழ்ச்சியில் அவருக்கு நன்றி கூறுகிறார் சக ஆட்டக்காரர் யுவான் மாட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

23 Jul 2019

மாட்டா: யுனைடெட்டை ஒருங்கிணைத்து வரும் போக்பா

ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் (இடது), எம்.எஸ்.டோனி. படங்கள்: இணையம்

23 Jul 2019

டோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக் குழுத் தலைவர் கருத்து