அரை இறுதியில் போர்ச்சுகல்

செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் நடைபெற்று வரும் கான்ஃபெட ரேஷன் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்கு போர்ச்சுகல் முன்னேறி யுள்ளது. அது நியூசிலாந்து அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. பெனால்டி வாய்ப்பு மூலம் போர்ச்சுகலின் முதல் கோலைப் போட்டவர் அவ்வணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அவரைத் தொடர்ந்து பெர்னார்டோ சில்வா, ஆண்ட்ரே சில்வா, நானி ஆகியோர் கோல்களைப் போட்ட போர்ச்சுகல் வெற்றியை உறுதி செய்தனர்.

போர்ச்சுகலுடன் மெக்சிகோ குழுவும் அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. அது போட்டியை ஏற்று நடத்தும் ரஷ்ய அணியை 2=1 என்ற கோல் கணைக்கில் வீழ்த்தி ரஷ்யாவை போட்டியை விட்டு மூட்டை கட்ட வைத்தது. போர்ச்சுகல் தகுதிச் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தனது பிரிவில் முதல் இடத்தில் உள்ளது. எனினும் ஆட்டத்தின் போது போர்ச்சுகல் தற்காப்பு ஆட்டக்காரர் பெப்பேவுக் கும் பெர்னார்டோ சில்வாவுக்கும் காயம் ஏற்பட்டதால் அவர்கள் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அரை இறுதியில் வியட்னாம் வீராங்கனையோடு போராடிய மாதுரி, 20. படங்கள்: ஊடகம்

09 Dec 2019

மலேசியாவின் மாதுரி கராத்தே போட்டியில் தங்கம்

வெற்றியைக் கொண்டாடும் சிங்கப்பூர் குழு. படம்: ஸ்போர்ட் சிங்கப்பூர்

09 Dec 2019

பிலிப்பீன்சை அலறவிட்ட சிங்கப்பூர் குழு

சிவப்பு நிற சீருடையில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் டேனியல் ஜேம்ஸைத் தடுத்து நிறுத்த முடியாமல் தவிக்கும் சிட்டி யின் ஏஞ்சலினோ. இவரை டேனியல் ஜேம்ஸ் சர்வசாதாரண மாக பல முறை தாண்டிச் சென்றார். படம்: இபிஏ

09 Dec 2019

என்ன, ஏது என தெரியாது தவித்த மேன்சிட்டி