துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனைக்குத் தங்கம்

பர்லின்: ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் உலகத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக் கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை யஷ்வினி சிங் தேஷ்வால் தங்கம் வென்றுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் யஷ்வினி 235.9 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். தென்கொரிய வீராங்கனை கிம்வூரி இரண்டாவது இடத்தை (231.8 புள்ளிகள்) பிடித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை ஒன்பது முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள யஷ்வினி, தற்போதுதான் முதல் முறையாகத் தங்கம் வென்றுள்ளார்.

இதன் மூலம் இந்திய அணி பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவதற்கு அவர் உதவியுள்ளார். சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்திய வீரர்கள் இதுவரை இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கம் வென்றுள்ளனர். போட்டியின் முதல் நாளில் ஆண்களுக்கான 25 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் அனிஷ் பன்வாலா இரண்டு தங்கங்களை வென்று அசத்தினார். பலமுறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று தோல்வியைத் தழுவியபோதிலும் துவண்டுவிடாமல் போராடிய இந்தியாவின் யஷ்வினி சிங் தேஷ்வால் இம்முறை தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற பிற நாட்டு வீராங்கனையுடன் யஷ்வினி (நடுவில்). படம்: இணையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய அணியும் கிரிக்கெட்டில் ஆட்சி செலுத்தும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் சகாப்தம் பிரையன் லாரா கணித்திருக்கிறார். படம்: ஏஎப்பி

19 Oct 2019

லாரா கணிப்பு: கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும்

அரை சதம் அடித்த சிங்கப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுரேந்திரன் சந்திரமோகன். படம்: ஐசிசி

19 Oct 2019

2019 டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்று: சிங்கப்பூர் பேரெழுச்சி