இந்தியா அபார வெற்றி

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் 43 ஓவர்களில் 311 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி ஓரங்கட்டியது. இந்தியா ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடை யிலான முதல் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் முதல்நாள் ஆட்டத்தைக் கைவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், இரண்டாவது ஆட்டம் அதே மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மழை பெய்ததால் ஆட்டம் காலதாமதம் ஆனது. பூவா தலையாவில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மழையினால் தாமதம் ஆனதால் ஆட்டம் 43 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. மழை நின்றதும் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே ஓட்டங்களைக் குவிக்கத் துவங்கியது. தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய அஜிங்கியா ரகானே 104 பந்துகளில் 103 ஓட்டங்களைக் குவித்தார். இவருடன் களமிறங் கிய ‌ஷிகர் தவான் 59 பந்துகளில் 63 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

வெஸ்ட் இண்டீஸின் விக்கெட் சாய்ந்ததைக் கொண்டாடும் இந்தியாவின் டோனி (இடது). படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

21 Apr 2019

‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி