சுடச் சுடச் செய்திகள்

தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் தாகிர்

துபாய்: 20 ஓவர் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) வெளியிட்டது. இதில் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில்  தென்ஆப்பிரிக்காவின்  சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் முதலிடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்ததால் தாகிருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் பும்ரா 2வது இடம் வகிக்கிறார். பந்தடிப்பாளர்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி  முதலிடத்தில் நீடிக்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon