சுடச் சுடச் செய்திகள்

காற்பந்து வீரர் மீது குற்றச்சாட்டு

பாரிஸ்: ஜெர்மனியின் பிரபல பயர்ன் மியூனிக் காற்பந்துக் குழுவிற்காக விளையாடி வருகிறார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிங்ஸ்லி கோமன், 21. முன்னாள் காதலியைத் தாக் கியதற்காக அவர் பிரெஞ்சு போலிசால் கைது செய்யப்பட்டார். குடும்ப வன்முறைக் குற்றச்சாட்டு அவர் மீது பதியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து கோமனே போலிசுக்குத் தகவல் தந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டா ரங்கள் தெரிவித்தன. போலிஸ் வந்து விசாரித்த போது, கோமன் தன்னை அடித்த தாக அவரது முன்னாள் காதலி கூறியதாகத் தெரிகிறது.

இவ்வாண்டின் பிற்பகுதியில் இவ்வழக்கு குறித்த நீதிமன்ற விசாரணை நடைபெறும் என்றும் அப்போது தனது குற்றத்தை கோமன் ஒப்புக்கொள்ளவிருப்ப தாகவும் தெரிவிக்கப்பட்டது. விளம்பர ஒப்பந்தம் தொடர் பாக எழுந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து கோமன் தனது முன் னாள் காதலியை அடித்ததாகக் கூறப்பட்டது. பிரெஞ்சுக் குழுவான பிஎஸ்ஜி யின் முன்னாள் வீரரான அவர், தேசிய குழுவிற்காகவும் இது வரை 11 போட்டிகளில் விளை யாடி இருக்கிறார். பிறகு யுவென் டசுக்காக விளையாடிய அவர், அதன்பின் பயர்னுக்கு இடம் மாறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon