சுடச் சுடச் செய்திகள்

யுவென்டசைவிட்டு விலகல்; உறுதிசெய்தார் ஆல்வெஸ்

டூரின்: பிரபல பிரேசில் காற்பந்து ஆட்டக்காரர்களில் ஒருவரான டேனி ஆல்வெஸ், 34, முன்னணி இத்தாலிய குழுவான யுவென் டசில் இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்தியுள்ளார். “இன்றுடன் யுவென்டசுக்கும் எனக்குமான தொழில்முறை உறவு முடிவுக்கு வருகிறது. ஆயினும் யுவென்டஸ் உடனான எனது நினைவுகள் எப்போதும் எந்நெஞ்சில் நிலைத்திருக்கும்,” என்று தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆல்வெஸ் தெரிவித்து இருக்கிறார். ஓராண்டுக்குமுன் ஸ்பெயினின் பார்சிலோனா குழுவில் இருந்து யுவென்டசுக்கு இடம் மாறினார் ஆல்வெஸ். 2016-17 பருவத்திற் கான இத்தாலிய லீக்கை யுவென் டஸ் வென்றபோதும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அக்குழு ரியால் மட்ரிட் குழுவிடம் மண் ணைக் கவ்வியது. அடுத்து, மான்செஸ்டர் சிட்டி குழுவிற்குச் செல்வார் என்று பேசப்பட்டு வந்தாலும் ஆல்வெஸ் இன்னும் அதை உறுதி செய்ய வில்லை. “பணத்திற்காக நான் காற் பந்து ஆடவில்லை. காற்பந்தையும் அதனுடன் தொடர்புள்ளவர்களை யும் நான் நேசிக்கிறேன்,” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon