எட்டாம் நிலை வீரருக்கு அதிர்ச்சியளித்த இந்தியர்

அன்டால்யா: டென்னிஸ் விளை யாட்டில் உலகத் தரவரிசையில் எட்டாமிடத்தில் இருக்கும் ஆஸ் திரிய வீரர் டோமினிக் தீமை வீழ்த்தி ஆச்சரியமளித்துள்ளார் 222ஆம் நிலையில் உள்ள இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், 22. துருக்கியில் நடைபெற்று வரும் அன்டால்யா ஓப்பன் தொடரின் காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட் டத்தில் ராம்குமார் 6=3, 6=2 என்ற நேர் செட்களில் தீமைத் தோற்கடித்தார். 59 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. உலகத் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் ஒருவரை ராம்குமார் வீழ்த்தியது இதுவே முதன்முறை.

டோமினிக் தீம் உலகின் முன் னாள் முதல்நிலை ஆட்டக்கார ரான ரஃபாயல் நடாலை இரு முறை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றபோதும் ராம்குமார் மகிழ்ச்சி யில் துள்ளிக் குதிக்காமல் அமை தியாக வந்து தீமுடன் கைகுலுக்கி தன்னடக்கத்துடன் நடந்துகொண் டார்.

சென்னையைச் சேர்ந்த இவர் போட்டிக்குப் பின் பேசுகையில், "எனது கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது. இதுவே எனது சிறந்த வெற்றி! இது தொடக்கம்தான். இனி வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் என நம்புகிறேன்," என்றார். தகுதிநிலை வீரராக இந்தத் தொடருக்குள் அடியெடுத்து வைத்த இவர், காலிறுதிச் சுற்றில் அனுபவ வீரரான சைப்ரஸ் நாட் டின் மார்க்கோஸ் பாக்டாட்டிசை எதிர்த்தாடவுள்ளார்.

ஆயினும், விம்பிள்டன் போட் டியின் தகுதிச் சுற்றுக்குக்கூட ராம்குமார் தகுதி பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

டோமினிக் தீமை வீழ்த்தியதே இதுவரையில் தான் பெற்ற வெற்றிகளில் சிறந்தது என்று கூறும் ராம்குமார் ராமநாதன். கோப்புப்படம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!