செல்சியில் இணைந்த முன்னாள் மேன்சிட்டி கோல்காப்பாளர்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளர் செல்சி, மான்செஸ்டர் சிட்டியின் முன்னாள் கோல்காப் பாளரான வில்லி காபல்லேரோவை ஒப்பந்தம் செய்துள்ளது. இலவச இடமாற்றம் அடிப்படை யில் செல்சியில் காபல்லேரோ இணைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த மாத இறுதி யுடன் மான்செஸ்டர் சிட்டியுடனான காபல்லேரோவின் ஒப்பந்தம் காலாவதியானது. இதையடுத்து, அர்ஜெண்டினாவைச் சேர்ந்த காபல்லேரோவின் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் சிட்டி அவரை விடுவித்தது. 35 வயது காபல்லேரோ 2014ஆம் ஆண்டில் ஸ்பெயினின் மலாகாவிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்றார். கடந்த பருவத்தில் சிட்டிக்காக அவர் 26 ஆட்டங்களில் களமிறங் கினார். செல்சியில் இணைந்ததில் தமக்கு மகிழ்ச்சி என்று அவர் கூறினார்.