விசாரணை கோரும் இந்திய துணை அமைச்சர் அத்வாலே

புதுடெல்லி: அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் குழுவிடம் இந்தியா படுதோல்வி அடைந்தது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார் இந்தியாவின் சமூக நீதி, அதிகாரத் துணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே. இந்தியாவின் அணித் தலைவரும் நட்சத்திர வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங்கும் பணம் பெற்றுக்கொண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தைக் கோட்டை விட்டதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப் படவேண்டும் என்று திரு அத்வாலே கோரிக்கை விடுத் துள்ளார். “சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அனைத்து ஆட்டங்களில் வெளுத்துக் கட்டிய இந்திய அணி இறுதி ஆட்டத்தில் மட்டும் எப்படி சுருண்டது?,” என்று இந்தியக் குடியரசு கட்சியின் நிறுவனரும் தலை வருமான அத்வாலே கேள்வி எழுப்பினார். இறுதி ஆட்டத்தில் பாகிஸ் தானிடம் 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வி அடைந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon