சுடச் சுடச் செய்திகள்

11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 11 ஓட்டங்கள் வித்தி யாசத்தில் தோல்வியைத் தழுவி யது. பூவா தலையாவில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் பந்தடிக்க முடிவெடுத்தார். இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், யுவராஜ் சிங், அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டு முகம்மது ஷமி, தினேஷ் கார்த்திக் மற்றும் ஜடேஜா ஆகியோர் சேர்க்கப் பட்டனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்களான எவின் லுவிஸ், கைல் ஹோம் ஆகியோர் தலா 35 ஓட்டங்களைக் குவித்தனர்.

நிதான துவக்கத்தை அளித்த ஜோடியைப் பாண்டியா ஆட்டமிழக்கச் செய்தார். துவக்க ஜோடியை தொடர்ந்து களமிறங் கிய ஷாய் ஹோப் 25 ஓட்டங் களுடனும் ராஸ்டன் சேஸ் 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். துவக்க ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மற்ற வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ஓட்டங்களை வெஸ்ட் இண்டீஸ் அணி குவித்தது.

இந்திய அணி சார்பில் ஹார் திக் பாண்டியா மற்றும் உமேஷ் யாதவ் தலா மூன்று விக்கெட்டு களை வீழ்த்தினர். குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளை கைப் பற்றினார். 190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக் கூடிய இலக்குடன் இந்தியப் பந்தடிப்பாளர்கள் களமிறங்கினர். ‌ஷிகர் தவான் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் விராத் கோஹ்லி 3 ஓட்டங்களிலும் தினேஷ் கார்த் திக் 2 ஓட்டங்களிலும் நடையைக் கட்டினர்.

ரகானே பொறுப்புடன் விளையாடி 91 பந்துகளில் 60 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந் தார். டோனி 54 ஓட்டங்களைக் குவித்தார். ஆனால் மற்ற வீரர்கள் ஓட்டங்களைக் குவிக்க தவறிய தால் இந்திய அணி 49.4 ஓவர் களில் 178 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத் தில் வெற்றியடைந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி (இடது) அனுப்பிய பந்தைப் பிடித்து அவரை ஆட்டமிழக்கச் செய்த வெஸ்ட் இண்டீஸின் ஷாய் ஹோப் (வலது). படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon