கொண்டாட்ட மழையில் நனைந்த ஜெர்மனி குழு

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் நடைபெற்ற கான்ஃபெடரேஷன்ஸ் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி பெற்று கிண்ணம் ஏந்தியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சிலியுடன் ஜெர்மனி மோதியது. இந்தப் போட்டியில் ஜெர்மனி கிண்ணம் வென்றிருப்பது இதுவே முதல்முறை. ஆட்டம் தொடங்கியதிலிருந்து சிலி பல தாக்குதல்களை நடத் தியது. இருப்பினும், கோல்களைப் போட அது தவறியது.

இந்நிலையில், ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் சிலியின் தற்காப்பில் நேர்ந்த குளறுபடியால் ஜெர்மனிக்கு கோல் போட பொன்னான வாய்ப்பு கிட்டியது. வலிய வந்த வாய்ப்பை ஜெர்மனி வீணாக்கவில்லை. கோல் வலைக்கு அருகில் சிலி தற்காப்பாளரிடமிருந்து பந்தைப் பறித்த ஜெர்மனி வீரர் சக வீரரான லார்ஸ் ஸ்டின்டலிடம் அதை அனுப்பினார். பந்து வலைக்குள் செல்வதை சிலியின் கோல்காப் பாளரால் தடுக்க முடியாமல் போனது. இதையடுத்து, ஆட்டத் தை எப்படியும் சமன் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் சிலி தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது.

போராடி வென்ற கிண்ணத்துடன் ஜெர்மனி வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்