‘ரவி சாஸ்திரிக்கு அதிக வாய்ப்பு’

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப் பேற்க ரவி சாஸ்திரிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக இந்தியாவின் முன்னாள் அணித் தலைவரும் தொலைக்காட்சி வர்ணனையாள ருமான சுனில் கவாஸ்கர் தெரி வித்துள்ளார். இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவ்வணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து, புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளரைத் தேடும் படலம் தொடங்கியுள்ளது.

புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியம் வரும் 9ஆம் தேதி வரை விண்ணப் பங்களைப் பெறுகின்றன. இதுவரை சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பைபாஸ், லால்சந்த் ராஜ்புத், தோடா கணேஷ், வெங்கடேஷ் பிரசாத், ரவி சாஸ்திரி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பில் சிம்மண்ஸ் ஆகியோர் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்காக விண்ணப்பம் செய்துள்ளனர். சச்சின், கவாஸ்கர், வி.வி.எஸ். லட்சுமண் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு புதிய பயிற்றுவிப்பாளரைத் தேர்ந்தெடுப் பதற்கான நேர்காணலை நடத்தி இம்மாதம் 10ஆம் தேதி தேர்வு செய்கிறது.

இந்நிலையில், இந்திய அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார் உள்ளார். "ரவி சாஸ்திரி ஏற்கெனவே இந்திய அணியின் இயக்குநராக 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை இருந் துள்ளார். சேவாக், டாம் மூடி ஆகியோர் சிறப்பாகப் பயிற்சி அளிக்கக்கூடியவர்கள். ஆனால் ரவி சாஸ்திரி அதைவிட அனு பவம் பெற்றவர். மேலும் ரவி சாஸ்திரி வீரர்களுடன் நல்ல முறையில் பழகக்கூடியவர். அவர் இருந்தால் அணிக்கு நல்லது. இதனால் விண்ணப்பம் செய் தோரில் அவர்தான் முன்னிலையில் உள்ளார்," என்று கவாஸ்கர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!