அனைத்துலகப் பூப்பந்து: தமிழக வீரர் வெற்றியாளர்

குவாட்டமாலா: குவாட்டமாலாவில் நடைபெற்ற அனைத்துலகப் பூப் பந்துப் போட்டியில் இந்தியாவின் கே.கரண்ராஜன் வெற்றியாளர் பட்டம் வென்றார். தமிழக வீரரான கரண்ராஜன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் குவாட்டமாலா வீரரான ஹாம் பிளர்ஸ் ஹேமண்டைச் சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத் தில் கரண்ராஜன் 21=19, 21=12 என்ற நேர்செட்டில் ஹேமண்டை வீழ்த்தி கிண்ணம் ஏந்தினார். இதன் மூலம் அவர் அனைத் துலக ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் தமிழக வீரர் எனும் பெருமையைப் பெற்றார். முன்னதாக நடந்த அரையிறுதி ஆட்டத்தில் போட்டியின் முதல் தரநிலை வீரரான ரூபென் கேஸ்ட் லானோசை கரண்ராஜன் தோற் கடித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.