சிங்கப்பூர்- இந்தியா நட்புமுறை மோதல்

இம்மாதப் பிற்பகுதியில் இடம்பெறவிருக்கும் ஆசிய காற்பந்து சம்மேளன சாம்பியன்‌ஷிப் தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு ஆயத்தமாகும் வகையில், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்தியா, சிங்கப்பூர் அணிகள் இரு நட்புமுறை ஆட்டங்களில் மோதவிருக்கின்றன. இம்மாதம் 9, 12 தேதிகளில் இரவு 7 மணிக்கு சுவா சூ காங் விளையாட்டரங்கில் அவை நடைபெறும்.