தொடரை வெல்ல முனைப்பு

கிங்ஸ்டன்: குறைவான இலக்கு என்றபோதும் பந்தடிப்பில் சறுக்கிய தால் நான்காவது ஒருநாள் கிரிக் கெட் போட்டியில் மண்ணைக் கவ்விய இந்திய அணி, இன்று நடக்கவுள்ள கடைசி, ஐந்தாவது ஆட்டத்தில் எழுச்சியுடன் ஆடி, தொடரை வெல்லும் முனைப்புடன் இருக்கிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்தாக, அடுத்த இரு ஆட்டங் களிலும் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், நான்காவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 190 ஓட்டங்கள் என்ற எளிதான இலக்கை நிர்ணயித்தபோதும் இந்திய அணி 11 ஓட்டங்களில் தோல்வி கண்டது.

முக்கியமான கட்டங்களில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததே தோல்விக்குக் காரணம் என்று இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி கூறியிருந்தார். பந்தடிப்பிலும் மந்தநிலை காணப்பட்டது. குறிப்பாக, அனுபவ ஆட்டக்காரரான டோனி அரை சதம் கடந்தபோதும் அதற்கு 108 பந்துகளை எடுத்துக்கொண்டது பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதேபோல, முன்னணி வீர ரான கோஹ்லியும் ஓட்டங்களைக் குவிக்கத் தடுமாறி வருகிறார். இரண்டாவது ஆட்டத்தில் 87 ஓட்டங்களை விளாசிய அவர், அடுத்த இரு போட்டிகளில் முறையே 11, 3 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

கடந்த இரு ஆட்டங்களில் சொற்ப ஓட்டங்களில் வெளியேறிய இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி இன்றைய ஆட்டத்தில் தமது முழுத் திறனை வெளிப்படுத்தி ஓட்டங்களைக் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!