இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை

லண்டன்: பந்தடிப்பு, களக்காப்பு, பந்துவீச்சு என அனைத்துப் பிரிவு களிலும் திறமையாக விளையாடிய இந்திய கிரிக்கெட் மகளிர் அணி, இலங்கை அணியை 16 ஓட்டங்களில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் முதன் முறையாக ஒரு போட்டித் தொடரில் தொடர்ந்து நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில் இலங்கை அணியை எதிர்கொண் டது இந்திய அணி. பூவா தலையாவில் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களைச் சேர்த்தது. இந்திய அணிக்காக தீப்தி சர்மா 78 (110) ஓட்டங்களும், அணித் தலைவி மித்தாலி ராஜ் 53 (78) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை வீராங்கனை ஸ்ரீபாலி வீரக்கொடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 233 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எனக் கள மிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டு களை இழந்து 216 ஓட்டங்களை மட்டுமே எடுத்துத் தோல்வியுற்றது. இலங்கை அணியின் திலானி மனோதரா 61 (75) ஓட்டங்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ஜுலான் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த் தினர். இந்தப் போட்டியில் தோற்ற தன் மூலம் இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வந்துள்ள இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களில், இங்கிலாந்தை 35 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், வெஸ்ட் இண் டீசை 7 விக்கெட் வித்தியா சத்திலும், பாகிஸ்தானை 95 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வென்றது. நாளை இந்தியா தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது.

இந்திய அணித் தலைவி மித்தாலி ராஜ் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon