சிங்கப்பூர் காற்பந்தில் மீண்டும் வின்சண்ட் சுப்ரமணியம்

கிட்டத்தட்ட 16 ஆண்டு இடை வெளிக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் துக்குத் திரும்புகிறார் முன்னாள் சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணி பயிற்றுவிப்பாளர் வின்சண்ட் சுப்பிரமணியம். அவர் கரேனா யங் லயன்ஸ் இளையர் குழுவின் பயிற்றுவிப் பாளராகவும் சிங்கப்பூரின் 22 வயதுக்கு உட்பட்ட அணிக்குத் துணைப் பயிற்றுவிப்பாளராகவும் பொறுப்பேற்கிறார். கோலாலம்பூரில் நடக்கவிருக் கும் தென்கிழக்கு ஆசிய விளை யாட்டுப் போட்டியில் இந்த இளையர் அணி பங்கேற்கவுள்ளது. கடந்த 1997, 1998ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் ஆயுதப் படை காற்பந்துக் குழுவை (தற்போது வாரியர்ஸ் காற்பந்துக் குழு என அழைக்கப்படுகிறது) லீக் கிண்ண வெற்றிக்குக் கொண்டு சென்ற திரு வின்சண்ட் 1998ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் தேசிய குழு பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பு வகித்தார்.

பின்பு சிங்கப்பூரின் எஸ் லீக் குழுக்களில் பணியாற்றி 2011ஆம் ஆண்டு குடும்பத்துடன் இந்தியா வுக்குச் சென்றார். அங்கு சில ஆண்டுகள் சர்ச்ஹில் காற்பந்துக் குழு பயிற்று விப்பாளராகப் பணியாற்றிய பிறகு ஆசிய காற்பந்து சம்மேளனத்தில் காற்பந்துப் பயிற்றுவிப்பாளர் களுக்குப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றி வந்துள்ளார். அப்பணியில் மிகுந்த மகிழ்ச் சியுடன் இருந்தாலும் சொந்த நாட்டுக்குப் பங்களிப்பது எப்போ துமே தமது ஆசையாக இருந்து வந்துள்ளது என்றார் 62 வயது திரு வின்சண்ட்.

திரு வின்சண்ட் சுப்பிரமணியம். கோப்புப்படம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சுதிர்மான் கிண்ணப் பூப்பந்துப் போட்டியின் ஆண் களுக்கான இரட்டையர் பிரிவில் சீனாவுக்கு எதிராக களமிறங்கிய இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி (இடது), சட்விக்சாய் ராஜ் ரன்கிரெட்டி தோல்வி அடைந்தனர். படம்: ஏஎஃப்பி

23 May 2019

சீனாவிடம் தோற்று வெளியேறிய இந்தியா

தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து

23 May 2019

கோமதியின் தங்கப் பதக்கம் பறிபோகும் அபாயம்