சம்பளப் பிரச்சினையால் போட்டியைப் புறக்கணித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்கள்

சிட்னி: தங்களது சம்பளப் பிரச்சினை இன்னும் தீர்க்கப் படாததால் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தைப் புறக்கணிப் பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வெளிநாட்டுப் போட்டித் தொடர் ஒன்றை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் புறக்கணித் துள்ளது இதுவே முதல் முறை. ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் சங்கம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீரர்களுக்குச் சம்பளம் வழங்கும் முறையில் திருத்தம் செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு அதே சம்பளம் வழங் கவும், மற்ற உள்ளுர் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை நிறுத்தி அதை வேறு சில முன்னேற்ற காரியங்களுக்குப் பயன்படுத்தவும் திட்டமிட்டது. அதற்கான ஒப்பந் தத்தில் அனைத்து வீரர்களும் கையெழுத்திட கடந்த ஜூன் 30 வரை கால அவகாசமும் அளித் திருந்தது.

ஆனால் அனைத்து வீரர்களும் இதற்கு மறுப்புத் தெரிவித்துக் கையெழுத்திட மறுத்ததை அடுத்து, ஜூலை 1ஆம் தேதி முதல் அனைத்து வீரர்களும் வேலையை இழந்ததாக கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. எனினும் வீரர்கள் கிரிக்கெட் வாரியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாமல் இனி வர விருக்கும் அனைத்து அனைத் துலகப் போட்டிகளையும் புறக்க ணிக்க இருப்பதாக அறிவித்தனர். இதுவரை வீரர்களுக்கும் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால் ஆஸ்திரேலியா ‘ஏ’ பிரிவு அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை ரத்து செய்வ தாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. ஆஸ்தி ரேலியா ’ஏ’ பிரிவு அணி இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா ’ஏ’ பிரிவு அணிகளுடன் முத்த ரப்பு தொடரில் விளையாடுவதாக இருந்தது. இந்தப் பிரச்சினையால் அனைத்துலகப் போட்டியில் விளையாடும் வீரர்கள் உள்ளுர் வீரர்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் வேலையை இழந்துள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

21 Apr 2019

‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி