மைலோவின் புதிய தூதரானார் ஸ்கூலிங்

மைலோ சிங்கப்பூர் பான நிறுவனத்தின் தூதராக ஒலிம்பிக் தங்கமகன் ஜோசஃப் ஸ்கூலிங் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 29வது தென் கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியின் நிதி ஆதரவாளர்களில் ஒன்று மைலோ சிங்கப்பூர். ஸ்கூலிங் இம்மாதம் நடைபெறும் உலக நீச்சல் போட்டியிலும் அடுத்த மாதத்தின் தென்கிழக்காசிய போட்டியிலும் பங்கேற்கின்றார். பெரியவர்களை ஈர்க்கும் விதமாக புதிய ‘காவ் சியூ தாய்’ எனும் குறைந்த சீனி அளவைக் கொண்ட மைலோ பானமும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் இருந்தவாறு (படம்) சிங்கப்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ‘ஸ்கைப்’ மூலம் ஸ்கூலிங்கும் அவரது தாயாரும் நேரடியாகத் தொடர்புகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon