புதிய வரவு லுக்காகு முதல் கோல்; மொரின்யோ மகிழ்ச்சி

சால்ட் லேக் சிட்டி: மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் புதிய வரவான ரொமேலு லுக்காகு தமது குழுவுக்காக அவரது முதல் கோலைப் போட்டுள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள குழுக்களுடன் நட்புமுறை ஆட்டங் களில் பங்கெடுத்து வருகிறது. அண்மையில் ஏறத்தாழ 75 மில்லியன் பவுண்ட்டுக்கு ஒப்பந்தமான லுகாக்கு யுனை டெட்டுக்காகத் தமது முதல் கோலைப் போட்டது குறித்து அக்குழுவின் நிர்வாகி ஜோசே மொரின்யோ மகிழ்ச்சி தெரி வித்தார்.

ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்திலேயே ரியல் சால்ட் லேக் குழு கோல் போட்டு முன்னிலை வகித்தது. சுதாரித்துக்கொண்டு விளை யாடிய யுனைடெட் 29வது நிமிடத்தில் மிக்கிதார்யான் மூலம் ஆட்டத்தைச் சமன் செய்தது. லுக்காகு தம்மிடம் அனுப்பிய பந்தை வலைக்குள் சேர்த்தார் மிக்கிதார்யான். அதனைத் தொடர்ந்து, 38வது நிமிடத்தில் லுக்காகுவின் காலிலிருந்து புறப்பட்டுச் சென்ற பந்து வலையைத் தொட்டது. இதுவே யுனைடெட்டின் வெற்றி கோலாக அமைந்தது. ஆட்டத்தின் பிற்பாதியில் தப்பாட்டம் காரணமாக யுனைடெட்டின் அண்டோனியோ வெலென்சியாவுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.

ரியல் சால்ட் லேக் குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர்களைக் கடந்து சென்று வலை நோக்கிப் பந்தை அனுப்பும் மான்செஸ்டர் யுனைடெட்டின் ரொமேலு லுக்காகு (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தனது பந்துவீச்சால் எதிரணியின் ஓட்ட விகிதத்தைக் கட்டுப்படுத்தத் தயாராகும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. படம்: இணையம்

21 May 2019

பந்தடிப்பாளர்களைப் பதம் பார்க்க காத்திருக்கும் ஷமியின் பந்துவீச்சு