சுடச் சுடச் செய்திகள்

‘எவர்ட்டன் சிறப்பாகச் செயல்படக்கூடும்’

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் அடுத்த பருவத்தில் எவர்ட்டன் குழு சிறப்பாகச் செயல்பட்டு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பட்டியலில் உயர்மட்ட நிலையை அடையக்கூடும் என்று அக்குழு வின் முன்னாள் அணித் தலைவர் ஃபில் நெவில் தெரிவித்துள்ளார். கடந்த பருவத்தில் பல நட்சத் திரக் குழுக்களைப் பின்னுக்குத் தள்ளி லீக் பட்டியலில் இரண் டாவது இடத்தை ஸ்பர்ஸ் பிடித்தது. இதுபோன்று இந்தப் பருவத் தில் எவர்ட்டன் சாதிக்கும் என்று நெவில் நம்பிக்கை தெரிவித்தார். தற்போது வீரர்களை வாங்கும், விற்கும் நடவடிக்கையில் இங் கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் பங்கெடுக்கும் குழுக் கள் மும்முரமாக ஈடுபட்டு வரு கின்றன.

இதுவரை செய்யப்பட்ட ஒப்பந் தங்களில் எவர்ட்டன் செய்துள்ள ஒப்பந்தங்கள்தான் ஆகச் சிறந் தவை என்று நெவில் கூறினார். இனி அக்குழு கடந்த பருவத்தில் ஸ்பர்ஸ் வெற்றிகளைக் குவித்தது போலவே ஒவ்வோர் ஆட்டத்திலும் மூன்று புள்ளி களைப் பெற குறிவைக்கவேண்டும் என்றார் நெவில். எவர்ட்டன் பல தரமிக்க வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட நெவில், லீக் பட்டியலில் உயரிய இடத்தைப் பிடிக்கவேண்டும் என்று அக்குழு இலக்கு கொண் டுள்ளதை இது காட்டுவதாகக் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon