செல்சியுடனான ஒப்பந்தத்தைப் புதுப்பித்த கோண்ட்டே

லண்டன்: செல்சியுடனான ஒப்பந் தத்தை அதன் நிர்வாகி அண்டோனியோ கோண்ட்டே புதுப்பித்துள்ளார். புதிய ஒப்பந்தப்படி கோண்ட்டே, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு செல்சியின் நிர்வாகியாகப் பொறுப் பேற்பார். “செல்சியுடனான ஒப்பந்தத் தைப் புதுப்பித்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். செல்சியின் நிர்வாகியாக நான் பொறுப்பேற்ற முதல் ஆண்டில் சாதனை படைக்க நாங்கள் அரும் பாடுபட்டோம். இனி அந்த உயரிய நிலையை எட்டிய பிறகு அதைத் தக்கவைத்துக்கொள்ள கூடுதல் உழைப்பு தேவை,” என்றார் கோண்ட்டே. ஒப்பந்தம் குறித்து ஏனைய விவரங்கள் வெளியிடப் படவில்லை.

கடந்த பருவத்தில் செல்சிக்குக் கிடைத்த நம்பமுடியாத வெற்றி யைக் கொண்டாடும் வகையில் கோண்ட்டேயின் ஒப்பந்தம் புதுப் பிக்கப்பட்டுள்ளதாக அக்குழுவின் இயக்குநர் மரினா கிரானோஸ்காயா கூறினார். “இங்கிலிஷ் பிரிமியர் லீக்கிலும் சாம்பியன்ஸ் லீக்கிலும் கோண்ட்டேயால் செல்சிக்கு வெற்றியைத் தேடித் தர முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருப்பதை இது உணர்த்துகிறது,” என்றார் அவர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தனது பந்துவீச்சால் எதிரணியின் ஓட்ட விகிதத்தைக் கட்டுப்படுத்தத் தயாராகும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. படம்: இணையம்

21 May 2019

பந்தடிப்பாளர்களைப் பதம் பார்க்க காத்திருக்கும் ஷமியின் பந்துவீச்சு