புதிய பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரியின் ஆண்டுச் சம்பளம் ரூ.7.5 கோடி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட ரவி சாஸ்திரிக்கு ஆண்டுக்கு ரூ.7.5 கோடி (ஏறத்தாழ 1.5 மில்லியன் வெள்ளி) சம்பளம் வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவராகவும் இயக்கு நராகவும் இருந்த அவர், 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரை இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக இருப்பார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் தலைவர் சி.கே. கண்ணா, செயலாளர் அமிதாப் சவுத்ரி, நிர்வாகக் குழு உறுப்பினர் டயனா எடுல்ஜி, தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி ஆகியோரைக் கொண்ட நான்கு பேர் குழு ரவி சாஸ்திரியின் சம்பளத்தை நிர்ண யித்தது. கிரிக்கெட் வர்ணனை யாளர் உட்பட பல்வேறு பொறுப்பு களில் பணியாற்றி வந்ததால் ரவி சாஸ்திரி தமது சம்பளத்தை ரூ.7.75 கோடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இறுதியில் ரூ.7.5 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு பயிற்று விப்பாளராக இருந்த அனில் கும்ளேவைவிட ரவி சாஸ்திரிக்கு வழங்கப்படும் சம்பளம் ரூ.1.25 கோடி (ஏறத்தாழ 250,000 வெள்ளி) அதிகம்.

கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் உள்ள சச்சின் டெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ். லட்சுமண் ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக ஜாகீர் கானை யும் பந்தடிப்பு ஆலோசகராக ராகுல் டிராவிட்டையும் பரிந்துரை செய்தனர். ஆனால் பிசிசிஐ இதை ஏற்க மறுத்தது. ஜாகீர் கான், டிராவிட் ஆகியோரால் அணியுடன் நீண்ட காலம் இருக்க முடியாது என்ற ரவி சாஸ்திரியின் கருத்தை ஏற்று அவரது விருப்பத்துக்கு ஏற்றவாறு பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக பரத் அருணும் பந்தடிப்புப் பயிற்று விப்பாளராக சஞ்சய் பாங்கரும் களக்காப்புப் பயிற்றுவிப்பாளராக ஸ்ரீதரும் நியமிக்கப்பட்டனர். ரவி சாஸ்திரி முன்பு அணியின் இயக்குநராக இருந்தபோது உள்ள குழு அப்படியே இடம்பெறுகிறது. இந்த வி ஷயத்திலும் ரவி சாஸ்திரி வெற்றி பெற்று இருக்கி றார். உதவியாளர்களைத் தமது விருப்பப்படியே கிரிக்கெட் வாரியத் தின் மூலம் நியமனம் செய்ய வைத்து உள்ளார். சஞ்சய் பாங்கர், பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோரின் ஆண்டு சம்பளம் முறையே ரூ.2.3 கோடி, ரூ.2.20 கோடி, ரூ.2 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!