சுடச் சுடச் செய்திகள்

மட்டையை மாற்றும் டோனி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை வரான மகேந்திர சிங் டோனி இவ்வாண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் தனது மட்டையை மாற்றவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ‘எம்சிசி’ எனப்படும் மெரில் போன் கிரிக்கெட் மன்றம் வகுத் துள்ள புதிய விதிமுறைகளின்படி மட்டையின் அதிகபட்ச தடிமன் 40 மில்லிமீட்டரைத் தாண்டக் கூடாது. இப்போது 45 மி.மீ. தடிமன் கொண்ட மட்டையை டோனி பயன்படுத்தி வருகிறார். ஆகை யால், அவர் புதிய விதிமுறை களுக்கு உட்படும் வகையில் தனது மட்டையின் தடிமனைக் குறைத்தாக வேண்டும். தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, அந்நாட்டு அணி யுடன் மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள், ஒரு டி20 போட்டியில் மோதவுள்ளது.

ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டும் ஆடி வரும் டோனிக்கு இலங்கை அணிக்கெதிரான தொடரே இப்போது அவர் பயன்படுத்தி வரும் மட்டையைக் கொண்டு விளையாடும் கடைசி அனைத்துலகத் தொடராக இருக்கும். புதிய விதிமுறைகளால் டோனி மட்டுமே பாதிக்கப்படவில்லை. அதிரடி ஆட்டத்திற்குப் பெயர் போன ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், வெஸ்ட் இண் டீசின் கிறிஸ் கெய்ல், கைரன் பொல்லார்ட் ஆகியோரும் தடி மனான, அதிக எடையுடன் கூடிய மட்டையைப் பயன்படுத்தி வருவதால் அவர்களும் இனி தங்கள் மட்டைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon