விம்பிள்டன் டென்னிசில் சூதாட்டப் புகார்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே நிர்ண யிக்கும் சூதாட்டம் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், விரைவில் விசாரணை தொடங் கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் முடிவடைந் தன. டென்னிஸ் உலகில் அதிக கௌரவமாக கருதப்படும் இந்தத் தொடரில், சூதாட்டம் நடந்து உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தப் போட்டியில் மட்டும் அல்லாமல், பிரெஞ்சு பொது விருது தொடரிலும் இதேப் போன்று சூதாட்டம் நடந்து உள்ளதாக, டென்னிஸ் ஒருங்கி ணைந்த பிரிவான டிஐயுவுக்குப் புகார்கள் வந்துள்ளன. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 53 புகார்கள் வந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகார்கள் குறித்த விசாரணை, மிக விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தற்போது முடிவடைந்த விம் பிள்டன் டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றின்போது இரண்டு போட்டிகளிலும் முக்கிய சுற்றுப் போட்டிகளில் ஒரு போட்டியிலும் சூதாட்டம் நடந்துள்ளதாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மூன்று போட்டிகளை மறுஆய்வு செய் வதற்கு டென்னிஸ் ஒருங்கி ணைந்த பிரிவு முடிவு செய்து உள்ளது. அந்தக் குற்றச்சாட்டில் போட்டி மற்றும் வீரர்கள் குறித்து விம்பிள்டன் டென்னிசில் சூதாட்டப் புகார் எந்தத் தகவலும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், தற்போது விளையாட்டு உலகத்தில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!