ஆஸ்திரேலியாவைச் சுழற்றி அடித்த ஹர்மன்பிரீத் கவுர்

ஆஸ்திரேலிய அணி வீசிய பந்துகளை சிக்சர், பவுண்டரி களாக விளாசித் தள்ளி 115 பந்துகளில் 171 ஓட்டங்களைக் குவித்த இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கௌருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் 20 பவுண்டரிகள், 7 சிக்சர்களை விளாசினார். பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நம்பிக் கையுடன் எதிர்கொண்ட ஹர்மன் பிரீத் கௌர் சூறாவளியாக சுழன்று அடித்தார். அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்தி ரேலிய பந்துவீச்சாளர்கள் திணறி னர். அவரது அதிரடியான ஆட்டத் தால் நடப்புச் சாம்பியனான ஆஸ் திரேலியாவுக்கு 283 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நிர் ணயித்தது இந்தியா. முடிவில், 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.

இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற முக்கிய காரணமாக இருந்த ஹர்மன்பிரீத் கௌருக்கு ஷேவாக், டெண்டுல்கர் உள்பட பலர் வாழ்த்துக் கூறி உள்ளனர். சமூக ஊடகங்களிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிக்கின்றன. 1983ஆம் ஆண்டு ஸிம்பாப் வேக்கு எதிராக கபில்தேவ் 175 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக் காமல் இருந்தார். அவரது இந்த ஆட்டத்தை நினைவுப்படுத்துவது போல் ஹர்மன்பிரீத் கௌர் ஆட் டம் இருந்தது என்றும் வர்ணிக் கப்படுகிறது.

ஒருநாள் போட்டியில் தனது மூன்றாவது சதத்தைப் பூர்த்தி செய்து உள்ளார் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கௌர். படம்: இணையம்