மீண்டும் சாதித்த மின்னல் வேக வீரர் உசேன் போல்ட்

மொனாக்கோ: மொனாக்கோவில் நடந்த ஐஏஏஎஃப் டைமண்ட் லீக் திடல்தடப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 9.95 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றார் உசேன் போல்ட். கடந்த மாதம் நடந்த மற்றொரு போட்டியில் இந்த தூரத்தை 10.06 வினாடிகளில் கடந்த போல்ட், மொனாக்கோ போட்டி யில்தான் இவ்வாண்டு முதல் முறையாக 10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் கடந்து உள்ளார். இப்போட்டியில் கலந்துகொள் வதற்கு முன்னதாக தனது முதுகுப் பிரச்சினை தொடர்பான சிகிச்சைக்காக போல்ட் ஜெர்மனி சென்று வந்தது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், இன்னும் 2 வாரங்களில் உலக வெற்றியாளர் போட்டியில் பங்கேற்கவுள்ள போல்ட், மொனாக்கோ போட்டி யில் 9.95 வினாடிகளில் கடந்து உள்ளார். இதனால் உலக வெற்றியாளர் போட்டியில் அடுத்து இடம்பெறும் 200 மீட்டர், 4x100 மீட்டர் அஞ்சல் ஓட்டம் ஆகியவற்றிலும் இவர் தங்கம் வெல்லும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் போட்டிக்குப் பிறகு போல்ட் ஓய்வுபெறுகிறார்.

மொனாக்கோ ஓட்டப் பந்தயத்தில் 100 மீட்டர் தூரத்தை 9.95 வினாடிகளில் கடந்த உசேன் போல்ட். படம்: ஏஎஃப்பி

Loading...
Load next