‘நெய்மார் குழு மாறவில்லை’

நியூஜெர்சி: பிரபல பிரேசில் காற் பந்து வீரர் நெய்மார் பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் குழுவிற்குச் செல்லக்கூடும் என்ற வதந்திக்கு மறுப்பு தெரிவித்துள் ளார் பார்சிலோனா குழு நிர்வாகி எர்னஸ்டோ வல்வெர்டே. வரும் வெள்ளிக்கிழமை நடை பெறவுள்ள அனைத்துலக வெற்றி யாளர் கிண்ணத் தொடரில் யுவென்டஸ் குழுவை எதிர்கொள் கிறது பார்சிலோனா. வல்வெர்டே நிர்வாகியாகப் பொறுப்பேற்ற பிறகு அவரது வழி காட்டுதலில் பார்சிலோனா விளை யாடவுள்ள முதல் ஆட்டம் இது. இந்த ஆட்டத்திற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த பார் சிலோனா நிர்வாகி வல்வெர்டே, “நெய்மார் பார்சிலோனா குழுவில் தான் இருக்கிறார். பார்சிலோனா குழுவிற்கு அவர் அவசியம் தேவை. “பிஎஸ்ஜி குழுவிற்கு அவர் செல்வதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே,” என்றார். இந்த வதந்தி பற்றி நெய் மாரிடம் தான் எதுவும் கேட்க வில்லை என்று சொன்ன அவர், “நாங்கள் ஆட்டத்திற்கான வியூ கம், திட்டமிடல், மற்ற விஷயங்கள் பற்றி மட்டுமே பேசினோம். “நெய்மார் நல்ல விளையாட் டாளர். காற்பந்தைத் தாண்டியும் அவர் ஒரு நல்ல மனிதர்,” எனத் தெரிவித்தார்.

பார்சிலோனாவின் நெய்மாரை 199 மில்லியன் பவுண்டுக்கு பிஎஸ்ஜி வாங்கவுள்ளதாக யூக செய்திகள் வெளியாகின. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆஸ்திரிய வீரரிடம் தோற்றுப்போன ஜோக்கோவிச்