டேனிலோவை வாங்கிய சிட்டி

மான்செஸ்டர்: இதுநாள் வரை ரியால் மட்ரிட் காற்பந்துக் குழு விற்காக விளையாடி வந்த பிரேசில் தற்காப்பு ஆட்டக்காரர் டேனிலோ, 26, இந்தப் பருவத்தில் இருந்து மான்செஸ்டர் சிட்டி குழு சார்பாக ஆடவிருக்கிறார். சிட்டியுடன் ஐந்தாண்டு ஒப் பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள டேனிலோ, பயிற்சிக்காக அமெ ரிக்காவில் முகாமிட்டுள்ள அக் குழுவுடன் விரைவில் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டது. அவரது இடமாற்றத்திற்காக 26.5 மில்லியன் பவுண்டு (S$47 மி.) தொகை கைமாறியுள்ளது. "நான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை ஒப்பந்தம் செய்ய பல குழுக்கள் ஆர்வம் காட்டின. இருந்தாலும், கார்டியோ லாவின் பயிற்சியின்கீழ் விளை யாடவேண்டும் என்பது எனது வெகுநாள் ஆசை. அதனால் சிட்டி குழு என்னை ஒப்பந்தம் செய்ய ஆர்வமுடன் உள்ளது என்பதை அறிந்ததும் நானே சிட்டி குழுவில் இணைய விரும்பி னேன்," என்றார் டேனிலோ. முன்னதாக, 23 வயதான பிரெஞ்சுத் தற்காப்பு ஆட்டக்காரர் பெஞ்சமின் மெண்டியை தன்னு டன் ஒப்பந்தம் செய்வதில் மொனாக்கோ குழுவுடன் உடன் பாடு எட்டப்பட்டுவிட்டது என்றும் இதற்காக 52 மி. பவுண்டு (S$92.5 மி.) தொகை கைமாற உள்ளது என்றும் சிட்டி குழு தெரிவித்திருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!