ஸ்கூலிங் புதிய சாதனை

புடாபெஸ்ட்: ஒலிம்பிக் வெற்றி யாளரான சிங்கப்பூரின் ஜோசஃப் ஸ்கூலிங், 22, உலக வெற்றியாளர் நீச்சல் போட்டிகளின் முதல் நாளிலேயே புதிய சாதனையைப் படைத்தார். 50 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி தகுதிச் சுற்றுப் போட்டியில் அவர் 23.05 வினாடிகளில் நீந்திக் கடந்து அரையிறுதிக்குள் நுழைந்தார். ஆசிய அளவில் இது புதிய சாதனை நேரம். முன்னதாக, 2015ல் கஸனில் நடந்த உலக வெற்றியாளர் போட்டிகளில் 23.25 வினாடிகளில் அவர் கடந் திருந்ததே முந்தைய சாதனை யாக இருந்தது. இருந்தாலும், உக்ரேனின் ஆண்ட்ரி கொவரோவ் (22.92 வினாடி), அமெரிக்காவின் கேலெப் டிரெஸ்ஸல் (22.97 வினாடி) ஆகியோர் ஸ்கூலிங்கை விட வேகமாக நீந்தினர்.