மூளையதிர்ச்சி: இங்கிலாந்து திரும்பும் செல்சி ஆட்டக்காரர்

ஆர்சனல் குழுவிற்கெதிரான நட்புமுறை ஆட்டத்தில் செல்சி குழு 3-0 என்ற கோல் கணக்கில் வென்றபோதும் அக்குழு வீரர் பெட்ரோ ரோட்ரிகெஸுக்கு (படம்) அந்த ஆட்டம் சோகமான ஒன்றாக அமைந்தது. ஆட்டத்தின் முற்பாதியில் ஆர்சனல் கோல் காப்பாளர் டேவிட் ஒஸ்பினாவுடன் மோதிக்கொண்ட தால் பெட்ரோவின் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. அத்துடன், அவர் தற்காலிக மூளையதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட தால் உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். இரவு முழுவதும் அவர் மருத் துவக் கண்காணிப்பில் வைக்கப் பட்டதாக செல்சி நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்தது. “அடுத்தகட்ட பரிசோதனைக் காக பெட்ரோ லண்டன் திரும்ப இருக்கிறார்,” என்றும் அந்த அறிக்கை கூறியது. சம்பவம் குறித்து டுவிட்டரில் பகிர்ந்துகொண்ட பெட்ரோ, “என்ன ஓர் அதிர்ச்சி! நல்லவேளையாக இப்போது எல்லாம் சரியாகிவிட்டது,” என்று தெரிவித்துள்ளார். ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத் தில் மிச்சி பட்சுவாயி இரு கோல் களையும் வில்லியன் ஒரு கோலை யும் அடித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon