சிங்கப்பூரில் காற்பந்துக் கொண்டாட்டம்

தங்களின் மனங்கவர்ந்த முன் னணிக் காற்பந்து ஆட்டக்காரர் களின் ஆட்டத்தை நேரில் கண்டு களிக்கும் வாய்ப்பு சிங்கப்பூர் ரசிகர்களுக்குக் கிடைத்திருக் கிறது. நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் வெற்றியாளர் செல்சி, ஜெர்மனியின் புண்டஸ்லீகா வெற்றியாளர் பயர்ன் மியூனிக், இத்தாலியின் முன்னணி குழுக்களில் ஒன்றான இன்டர் மிலான் ஆகிய குழுக்கள் சிங்கப் பூர் தேசிய விளையாட்டரங்கில் நடக்கவுள்ள அனைத்துலக வெற்றி யாளர்கள் கிண்ணப் போட்டிகளில் பலப்பரிட்சை நடத்தவுள்ளன. இதற்காக, பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் நடந்த நட்புமுறை ஆட்டத்தில் ஆர்சனல் குழுவை வீழ்த்திய கையோடு சிங்கப்பூர் வந்திறங்கியது செல்சி குழு. முதல் வீரராக நேற்று முன் தினமே இங்கு வந்து சேர்ந்தார் செல்சியின் புதிய வரவான ஸ்பெயினின் அல்வேரோ மொராட்டா. அண்மையில் ஸ்பெயினின் ரியால் மட்ரிட் குழுவிடம் இருந்து அவரை 60 மில்லியன் பவுண்டு கொடுத்து வாங்கி, ஐந்தாண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது செல்சி. நாளை இரவு 7.35 மணிக்குத் தொடங்கும் முதல் ஆட்டத்தில் செல்சியும் பயர்ன் மியூனிக்கும் மோதுகின்றன. பயர்ன்=இன்டர் மோதல் 27ஆம் தேதி வியாழக் கிழமையும் செல்சி=இன்டர் மோதல் 29ஆம் தேதி சனிக் கிழமையும் நடைபெறவுள்ளன. முன்னதாக வர அறிவுறுத்தல் போட்டியை நேரில் காண அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் திரளுவர் என எதிர்பார்க்கப்படு வதால் பாதுகாப்புச் சோதனைகள் அதிகரிக்கப்படவுள்ளன. அதனால் போட்டி தொடங்க ஒரு மணி நேரத்திற்கு முன்னரே அரங்கிற்கு வரும்படி ரசிகர்கள் அறிவுறுத்தப் படுகின்றனர்.

ரிட்ஸ் கார்ல்ட்டன் ஹோட்டல் முன்பாகத் திரண்டிருந்த ரசிகர்களின் ஆரவாரத்தை ஏற்றுக்கொள்ளும் விதமாகக் கையசைக்கும் செல்சி வீரர் ஃபேப்ரிகாஸ் (வலமிருந்து 2வது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், இளம் ஆல்ரவுண்டர் சேம் கரன் என இருவரை ஒரே ஓவரில் வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய நேப்பாள சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லமிசானேவை (இடது) பாராட்டி மகிழும் டெல்லி அணித்தலைவர் ஷ்ரேயாஸ். படம்: ஏஎஃப்பி

22 Apr 2019

பழிதீர்க்கப்பட்ட பஞ்சாப்

இன்னும் ஐந்து ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே இந்தப் பருவத்தின் இத்தாலிய லீக் பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் யுவென்டஸ் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள் (இடமிருந்து) யுவான் குவட்ரடோ, பிளேஸ் மட்விடி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, எம்ரி கேன். படம்: ஏஎஃப்பி

22 Apr 2019

ரொனால்டோ வரலாற்றுச் சாதனை