சுடச் சுடச் செய்திகள்

நீச்சல் போட்டி: அரை இறுதி வாய்ப்பைத் தவறவிட்டார் குவா ஸெங் வென்

புடாபெஸ்ட்: சிங்கப்பூர் நீச்சல் வீரரான குவா ஸெங் வென் (படம்) நேற்று நடந்த உலக வெற்றியாளர் போட்டி யில் 100 மீட்டர் மல்லாந்து நீந்தும் போட்டியின் அரையிறுதியில் கலந்துகொள்வதற்கான தகுதியை இழந் தார். 20 வயது குவா, தகுதிச் சுற்- றுப் போட்டியில் 54.68 நொடியில் முடித்தார். எனவே அவர் நேற்று நடைபெற்ற 16 பேர் பங்குபெறும் அரையிறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியை இழந்தார். அரை இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போனது பற்றி கூறிய குவா, “நேற்று நான் கலந்துகொண்ட போட்டி வரைக்கும் என்னால் இயன்றவரை சிறப்பாகவே செய் தேன்.

இருப்பினும் மல்லாந்து நீந்தும் போட்டியில் எவ்வளவு சாதித்தேன் என்றுதான் பார்க்கவேண்டும். நான் இந்தப் போட்டியில் இன்னும் சற்றுக் கூடுதலான வேகத்தைக் காட்டியிருந்தால் கொஞ்சமும் சிரமமின்றி எளிதாக அரைஇறுதிப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருப் பேன்,” என்றார். மேலும் அவர் கூறுகையில், “இந்தத் தோல்வியை எண்ணி நான் துவண்டு போய்விடவில்லை. இப்போது 200 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல் போட்டியில்தான் எனது முழுக்கவனமும் உள்ளது. முந் தைய போட்டிகளில் வெளிக்காட்டிய திறமை, வேகம் ஆகியவற்றைக் காட்டிலும் எதிர் கொள்ளவிருக்கும் போட்டியில் சாதிப்பதற்கு இன்னும் சிறப்பாக செயல்படுவேன்,” என்றார். அரை இறுதிப்போட்டி தகுதிச் சுற்றில் முன்னணியில் இருப்பவர் சீனாவின் ‌ஷு ஜியாயு, இவர் நீந்திக் கடந்த நேரம் 52.77 நொடிகள்.

குவா ஏற்கெனவே 2015ஆண்டு ரஷ்யாவில் காஸனில் நடந்த போட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவரால் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல் படவில்லை. மாஸ்கோவில் நடந்த ஃபினா உலகக் கிண்ணப் போட்டியில் குவா, தேசிய அளவில் 54.03 நொடிகளில் நீந்தி சாதனை படைத்தார். சிங்கப்பூரின் ஜோசப் ஸ்கூலிங் 50மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி இறுதிப்போட்டியிலும் 100 மீட்டர் எதேச்சைப் பாணி மற்றும் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டிகளிலும் கலந்துகொள்கி றார். ஆனால் 200 மீட்டர் வண் ணத்துப்பூச்சிப் பாணி நீச்சல் போட்டியில் கலந்துகொள்ள வில்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon