வெற்றிப் பாதையில் மான்செஸ்டர் யுனைடெட்

கலிஃபோர்னியா: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் அமெரிக்கப் பயணம் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது. பயிற்சிக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ள யுனைடெட் குழு, இதுவரை பங்கேற்ற நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஸ்பானிய லா லீகா வெற்றியாளரான ரியால் மட்ரிட் குழுவுடனான அனைத்துலக வெற்றியாளர்கள் கிண்ண ஆட்டத்திலும் யுனைடெட் வாகை சூடியது. ஆட்ட நேர முடிவில் கோல் கணக்கு 1=1 எனச் சமநிலையில் இருந்ததால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி வாய்ப்புகள் முறை கையாளப்பட்டது. இதில் 2=1 என்ற கணக்கில் யுனைடெட் வெற்றி பெற்றது. யுனைடெட் கோல்காப்பாளர் டேவிட் டி கியாவை நீண்டகாலமாக தன்பக்கம் இழுக்க முயன்று வரும் ரியால் குழுவிற்கு இந்த ஆட்டத்தில் அவரே வில்லனாக அமைந்தார். பெனால்டி வாய்ப்புகளில் கொவாசிச், ஆஸ்கர் ஆகியோர் அடித்த பந்துகளை அவர் அருமையாகத் தடுத்தார்.

இன்னொரு ரியால் வீரரான கேஸ்மிரோ பந்தை கோல்கம்பத்தின் மீது அடித்து, வாய்ப்பை வீணாக்கினார். முன்னதாக, ஆட்ட நேரத்தின்போது யுனைடெட் சார்பில் அந்தோணி மார்‌ஷியாலும் ரியால் சார்பாக கேஷ்மிரோவும் ஆளுக்கு ஒரு கோலடித்தனர். சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான ரியாலும் யூரோப்பா லீக் வெற்றியாளரான யுனைடெட்டும் அடுத்த மாதம் யூஃபா சூப்பர் கிண்ண ஆட்டத்தில் மீண்டும் மோதவுள்ளன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து

23 May 2019

கோமதியின் தங்கப் பதக்கம் பறிபோகும் அபாயம்

சுதிர்மான் கிண்ணப் பூப்பந்துப் போட்டியின் ஆண் களுக்கான இரட்டையர் பிரிவில் சீனாவுக்கு எதிராக களமிறங்கிய இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி (இடது), சட்விக்சாய் ராஜ் ரன்கிரெட்டி தோல்வி அடைந்தனர். படம்: ஏஎஃப்பி

23 May 2019

சீனாவிடம் தோற்று வெளியேறிய இந்தியா