சுடச் சுடச் செய்திகள்

மீண்டெழத் துடிக்கும் பயர்ன்

தேசிய விளையாட்டரங்கில் இன்றி- ரவு நடக்கவிருக்கும் அனைத்துலக வெற்றியாளர்கள் கிண்ணக் காற்- பந்துப் போட்டியில் நடப்பு இங்- கிலிஷ் பிரிமியர் லீக் வெற்றியாள- ரான செல்சி குழுவும் ஜெர்மனியின் புண்டஸ்லீகா வெற்றியாளரான பயர்ன் மியூனிக்கும் மோதவிருக்- கின்றன. ஆர்சனல் குழுவுடனான ஆட்- டத்தில் பெனால்டி வாய்ப்புகளில் தோற்ற பயர்ன் குழு, தனது அடுத்த ஆட்டத்தில் இத்தாலியின் ஏசி மிலான் குழுவிடம் 0=4 என மண்ணைக் கவ்வியது. ஆகையால், இன்றைய ஆட்டத்- தில் எப்பாடுபட்டேனும் வெல்லும் முனைப்புடன் அக்குழுவினர் விளையாடுவர் என்பது நிச்சயம். அதே நேரத்தில் கோல்காப்பாளர் மானுவல் நூயர், ஆர்யன் ராபன், ஜெரோம் போட்டெங் ஆகியோர் சிங்கப்பூர் பயணத்தில் இடம் பெறா ததால் அக்குழு சற்று பலம் இழந்து காணப்படுவதாகச் சொல் லப் படுகிறது. போதாதற்கு, ஏசி மிலான் குழுவுடனான ஆட்டத்தின் போது காயமடைந்த தற்காப்பு ஆட்டக் காரர் யுவான் பெர்னாட் சிகிச்சைக்காக ஜெர்மனி திரும்- பியதும் பயர்னின் பலத்தைக் குறைத்திருக்கிறது.

சிங்கப்பூரில் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பயர்ன் மியூனிக் கொலம்பிய ஆட்டக்காரர் ஜேம்ஸ் ரோட்ரிகெஸ் (வலது), பயிற்றுவிப்பாளர் கார்லோ அன்செலோட்டி. படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon