லிவர்பூல்-ஸ்பர்ஸ் இன்று மோதல்

ஒரு குழு 70களிலும் 80களிலும் கொடி கட்டிப் பறந்து பின் சரிவை எதிர்நோக்கி தற்போது தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட முயற்சி செய்துகொண்டிருக்கிறது. மற்றொரு குழு 50களில் உச்சத்தை எட்டி கடந்த சில ஆண்டுகளாகவே முன்னணி குழுக்களில் ஒன்று எனும் பெயரை நிலைநாட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இங்கிலிஷ் பிரிமியர் லீக் ரசிகர்களுக்கு லிவர்பூல், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்ஸ் (ஸ்பர்ஸ்) குழுக்களின் வரலாற்றுப் பின்ன ணி தெரிந்திருக்கும். 70களிலும் 80களிலும் முன்னணிக் குழுவாகத் திகழ்ந்த லிவர்பூல் இறுதியாக லீக் கிண்ணத்தை வென்றது 27 ஆண்டுகளுக்கு முன்பு. லிவர்பூல் குழுவிற்கு ஈடான வரலாற்றுச் சிறப்பைக் கொண்ட குழு ஸ்பர்ஸ் குழு. 1950களில் இரு முறை லீக் கிண்ணத்தை வென்றிருந்தாலும் பல முறை எஃப்ஏ கிண்ணங்களை அது வென்றுள்ளது. ஐரோப்பிய அரங்கிலும் ஓரளவுக்கு திறம்பட செயல்பட்டு வந்துள்ளது. இந்த இரு குழுக்களுமே கடந்த சில ஆண்டுகளாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் தங்களது ஆதிக் கத்தைச் செலுத்தி வந்துள்ளன. ஸ்பர்ஸ் தற்போது லீக் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அண்மையில் சாம்பியன்ஸ் லீக் ஆட்டம் ஒன்றில் பலம் பொருந்திய ரியால் மட்ரிட் குழுவுடன் 1-1 என்ற சமநிலை பெற்றது அக்குழுவிற்கு ஊக்கத்தைக் கொடுத்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!