மேன்யூ வீரர்கள் மீது மொரின்யோ அதிருப்தி ஹெடர்ஸ்ஃபீல்ட்: இங்கிலிஷ்

பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி யில் ஹெடர்ஸ்ஃபீல்ட் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 2-=1 எனும் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவி உள்ளது. இதுவே இப்பருவத்தில் யுனைடெட் சந்தித்துள்ள முதல் தோல்வி. யுனைடெட்டை ஹெடர்ஸ்ஃபீல்ட் குழு இதற்கு முன்பு ஆகக் கடைசியாக 1952ஆம் ஆண்டில் தோற்கடித்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தோல்விக்குத் தமது ஆட்டக் காரர்களின் மிக மோசமான மனப்போக்குதான் காரணம் என்று யுனைடெட்டின் நிர்வாகி ஜோசே மொரின்யோ கடுமையாக விமர் சித்துள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட்டின் ஜுவான் மாட்டா, விக்டர் லிண்ட லோஃப் ஆகியோர் செய்த பிழை களால் ஹெடர்ஸ்ஃபீல்ட் குழுவின் இரண்டு கோல்களும் போடப் பட்டன. "இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று எனக்குத் தெரியும். அதற்காகக் காத்துக்கொண்டிருந் தேன். மாட்டாவும் லிண்டலோஃப்பும் செய்த பிழைகளால் ஹெடர்ஸ் ஃபீல்ட் கோல்கள் போட்டது. மற்ற ஆட்டக்காரர்களும் தவறு செய்து ஹெடர்ஸ்ஃபீல்ட் கூடுதல் கோல் போட்டிருக்கக்கூடும். யுனைடெட் ஆட்டக்காரர்களின் மிக மோச மான மனப்போக்கு இதற்குக் காரணம். "எங்களைவிட நன்கு விளை யாடும், தரம் கொண்ட குழுவிடம் தோற்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் தவறான மனப்போக்கு காரண மாகத் தோல்வி அடைவது முறை யல்ல," என்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார் மொரின்யோ. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஆரோன் மோய்யும் 33வது நிமிடத்தில் டெபோய்ட்ரேயும் ஹெடர்ஸ்ஃபீல்ட் குழுவுக்கு கோல்கள் போட்டனர்.

ஹெடர்ஸ்ஃபீல்ட் குழுவின் முதல் கோலைப் போடும் ஆரோன் மோய் (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!