வெங்கர்: எதிரணியினர் முனைப்புடன் விளையாடினர்

நாட்டிங்ஹம்: எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் மூன்றா வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று அனைவரையும் அதிர்ச்சி யில் தள்ளிய நாட்டிங்ஹம் குழு முனைப்புடன் விளையாடியதாகத் தோல்வியைத் தழுவிய ஆர்சனல் குழுவின் நிர்வாகி ஆர்சின் வெங்கர் கூறியுள்ளார். மேலும், தமது ஆர்சனல் குழு ஒட்டுமொத்தமாக சரியான முறை யில் விளையாடவில்லை என்றும் அதற்கான விளைவை ஏற்றுக் கொள்வதாகவும் வெங்கர் கூறினார்.

நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் 4-2 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற் றது நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் குழு. 22 ஆண்டுகளில் முதல் முறை யாக மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ஆர்சனல் குழு தோல்வியுற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சாதனை அளவாக 13 எஃப்ஏ கிண்ண வெற்றிகளைக் கொண்டுள்ள ஆர்சனலுக்கு நிரந்தர நிர்வாகி இல்லாத நிலை யிலும் திறன்பட விளையாடிய நாட்டிங்ஹம் குழுவிடம் தோற்றது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!