லிவர்பூல் அதிர்ச்சி தோல்வி

லண்டன்: லிவர்பூல் குழுவும் சுவான்சி சிட்டி குழுவும் நேற்று முன்தினம் பொருதிய இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி யில் 1-=0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. சுவான்சி சிட்டியின் லிபர்டி விளையாட்டு அரங்கில் நடந்த ஆட்டத்தின் ஒரே கோலை தற்காப்பு ஆட்டக்காரர் அல்ஃபி மவ்சன் போட்டார். சௌத்ஹேம்டன் குழுவில் இருந்து 75 மில்லியன் பவுண்ட்ஸ் ($138 மில்லியன்) தொகைக்கு லிவர்பூல் குழுவிற்கு குழுமாற்றம் பெற்ற தற்காப்பு ஆட்டக்காரர் விர்கில் வேன் டைக் அடித்த பந்து மவ்சனின் வசம் கிடைத்ததை அடுத்து வாய்ப்பை நழுவவிடாமல் 40வது நிமிடத்தில் அவர் வலைக்குள் கோலைப் புகுத்தினார்.

பிரிமியர் லீக் பட்டியலில் கீழ் இடத்தில் உள்ள சுவான்சி குழுவிற்கு இந்த வெற்றி பிரம்மாண்ட ஒன்றாக இருந்தது. முன்னதாக விளையாடிய 18 ஆட்டங்களிலும் தோல்வி காணாத லிவர்பூல் அணிக்கு கோல் புகுத்த பற்பல வாய்ப்புகள் கிடைத்த போதும் சுவான்சி குழு சற்றும் தளரவில்லை. இரண்டாம் பாதியில் தற்காப்பை வலுப்படுத்தி லிவர்பூல் குழுவின் அனைத்து முயற்சிகளை யும் சுவான்சி குழுவினர் வீணடிக்க வைத்தனர். லிவர்பூல் குழுவை எஃப்1 காருடன் ஒப்பிட்டுப் பேசிய சுவான்சி குழுவின் நிர்வாகி கார்லோஸ் கர்வல்ஹல், அவ்வப் போது பந்தய கார்களும் போக்கு வரத்து நெரிசலாக இருக்கும்போது மெதுவடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தப் பருவத்தின் ஆறாவது கோலைப் புகுத்திய பெருமிதத்தில் சுவான்சி சிட்டி குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் அல்ஃபி மவ்சன் தன் குழுவினருடன் கொண்டாடுகிறார். சுவான்சி சிட்டி புகுத்திய ஆட்டத்தின் ஒரே கோல் லிவர்பூல் குழுவை அதிர்ச்சி தோல்வியை எதிர்நோக்கச் செய்தது.

நேற்று முன்தினம் சுவான்சியின் சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தின் முதல் பாதியில் சுவான்சி கோலைப் புகுத்தியது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!