ரொனால்டோவை நம்பி இருக்கும் ரியால் மட்ரிட்

மியூனிக்: சாம்பியன்ஸ் லீக் காற் பந்துத் தொடரின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நாளை அதி காலை பயர்ன் மியூனிக், ரியால் மட்ரிட் குழுக்கள் மோதுகின்றன. கேரத் பேல், கரிம் பென்சிமா, ரொனால்டோ என நட்சத்திர பட் டாளத்தையே கொண்டிருக்கிறது ரியால். ஆனாலும் அக்குழுவை அரை இறுதி வரை முன்னேற செய்த ரொனால்டோவைத்தான் இப்போ தும் அக்குழு நம்பி உள்ளது.

அதற்குக் காரணம், பேல், பென்சிமாவிற்கான முக்கியத்துவம் குறைந்ததே. இவ்வாண்டுத் தொடக்கத்தில் காயத்தில் இருந்து மீண்டு வந்த பேல், பிஎஸ்ஜி, யுவென்டஸ் குழுக் களுக்கு எதிராக களமிறக்கப்பட வில்லை. அதுபோல் ரொனால்டோவின் உற்ற பங்காளியான பென்சிமா, கோல் போடுவது குறைந்த நிலை யில், நிர்வாகி ஸினடின் ஸிடான் அவரை முக்கிய ஆட்டக்காரராக முன்னிறுத்துவதில்லை.

கடைசியாக விளையாடிய 24 ஆட்டங்களில் பென்சிமா நான்கு கோல்களை மட்டுமே போட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, ரியாலின் வெற்றி ரொனால்டோவின் கைகளில் உள் ளதாகப் பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில் கடைசியாக நடந்த 11 ஆட்டங்களிலும் தலா ஒரு கோல் போட்டுள்ளார் ரொனால்டோ. இந்நிலையில் பேசிய பயர்ன் குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் ஜெரோம், "ரொனால்டோவைக் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினம். ஒரு குழுவாக மட்டுமே அவரைத் தடுக்க முடியும்.

"கோல் என்று வந்துவிட்டால் அவர் ஒரு எந்திரத்தைப் போல் செயல்படுவார்," என்று கூறினார். ஆனால் பயர்ன் குழுவின் இன்னோர் வீரரான ராபர்ட் லெவன் டோவ்ஸ்கி, "ரொனால்டோ மட்டும் அபாரமாக விளையாடினால் போதாது. ஒட்டுமொத்தக் குழு வின் ஆட்டமும் முக்கியமானது. "தற்காப்பில் கவனம் செலுத்து வோம். எங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தும் நிலையில், அது ரியாலுக்கு சவாலாகவே இருக் கும்," என்று எச்சரித்துள்ளார். அரையிறுதிப் போட்டியின் இந்த முதல் சுற்று பயர்ன் மியூனிக் கின் சொந்த அரங்கில் நடைபெற வுள்ளது அக்குழுவிற்குப் பலமாகப் பார்க்கப்படுகிறது. பயர்ன் மியூனிக்கிற்கு எதிரான ஆறு ஆட்டங்களில் ரொனால்டோ ஒன்பது கோல்களைப் போட் டுள்ளது கவனிக்கத்தக்கது.

ஸ்பானிய லா லீகா பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ரியால் மட்ரிட், இப்பருவத்தில் பட்டம் வெல்ல துடிக்கும் நிலையில் பயர்ன் மியூனிக் குழுவோ மட்ரிட் குழுவிற்கு கடும் போட்டியை கொடுப்போம் என்று கூறியுள்ள தால், இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!