கிண்ணம் வென்றது அட்லெட்டிகோ மட்ரிட்

லியோன்: பிரெஞ்சுக் காற்பந்து வீரர் அன்டோய்ன் கிரீஸ்மன் இரு கோல்களைப் போட, அட்லெட்டிகோ மட்ரிட் குழு யூரோப்பா லீக் கிண்ணத்தை வென்றது. அண்மைக்காலமாக, பார்சி லோனா, ரியால் மட்ரிட் காற்பந்துக் குழுக்களுக்குக் கடும் போட்டி கொடுக்கும் அளவிற்கு அட்லெட் டிகோ மட்ரிட் குழுவின் ஆட்டம் முன்னேற்றம் கண்டுள்ளது. அரையிறுதிப் போட்டியில் ஆர் சனலை வீழ்த்தி இருந்தது அட் லெட்டிகோ. அக்குழுவின் நிர்வாகி டியேகோ சிமியோனிக்கு நான்கு ஆட்டங்கள் தடை விதிக்கப்பட்ட நிலையில், மார்சே குழுவிற்கு எதிரான நேற்றைய இறுதி ஆட் டத்தின்போதும் அவர் பார்வையா ளராகவே இருக்க நேர்ந்தது.

முற்பாதி நேரத்தில் கிரீஸ்மன் ஒரு கோல் போட்டதும் ஆட்டம் அட்லெட்டிகோ குழுவின் கட்டுப் பாட்டிற்குள் சென்றது. மார்சே குழுவிற்காக அதன் தலைவர் வலேரி ஜெர்மானும் தாக் குதல் ஆட்டக்காரர் கோஸ்டஸ் மிட்ராகுலுவும் உதைத்த பந்து கோல்கம்பத்தை மட்டுமே உரசி சென்றது.

சாதித்த மகிழ்ச்சியில் யூரோப்பா லீக் கிண்ணத்தை உயர்த்திப் பிடித்து ஆர்ப்பரிக்கும் ஸ்பெயினின் அட்லெட்டிகோ மட்ரிட் காற்பந்துக் குழுவினர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!