வெற்றியுடன் விடைபெற்றார் பார்சிலோனாவின் இனியெஸ்டா

பார்சிலோனா: ஸ்பானிய லா லீகா பட்டத்தை 25வது முறையாகக் கைப்பற்றியது பார்சிலோனா காற்பந்துக் குழு. இத்தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ரியால் சோ‌ஷியடாட் குழுவை 1-=0 என்ற கோல் கணக் கில் வீழ்த்தியது பார்சிலோனா. முதல் பாதி ஆட்டம் கோல் எதுவும் இல்லாமல் முடிய, பிற்பாதி நேரத்தில் ஆட்டத்தின் ஒரே கோலைப் போட்டார் பார்சி லோனாவின் கொட்டீனியோ. பார்சிலோனாவிற்காக தமது கடைசி கோலைப் போட முயன்ற இனியெஸ்டாவின் முயற்சி பலன் அளிக்கவில்லை.

பார்சிலோனாவிற்காக 674 ஆட்டங்களில் விளையாடியுள்ள இனியெஸ்டா, 34, அக்குழுவுட னான 22 ஆண்டுகால பயணத் திற்கு வெற்றியோடு விடை கொடுத்தார். சக வீரர்கள் கட்டியணைத்துப் பிரியாவிடை கொடுக்க, "இனி யெஸ்டாவைப் போல் இன்னோர் வீரர் கிடையாது," என்று புகழாரம் சூட்டினார் அதன் நிர்வாகி. எய்பார் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல்களை போட்ட மனநிறைவுடன் அட்லெட் டிகோ மட்ரிட் வீரர் ஃபெர் னாண்டோ டோரசும் அக்குழுவில் இருந்து விடைபெற்றார். அட்லெட்டிகோ குழுவிற்காக 321 போட்டிகளில் 109 கோல் களைப் போட்டுள்ளார் முன்னாள் லிவர்பூல் வீரரான டோரஸ்.

பார்சிலோனா குழுவில் இருந்து விடைபெறும் இனியெஸ்டாவைக் கொண்டாடும் வீரர்கள். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!