நெய்மார்: திரும்ப வந்ததில் பெருமகிழ்ச்சி

லிவர்பூல்: காயத்தில் இருந்து பூரண குணமடைந்து மீண்டும் காற்பந்துக் களத்தில் அடியெடுத்து வைத்த முதல் போட்டியிலேயே கோலடித்ததில் பெருமகிழ்ச்சி அடைவதாக பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் தெரிவித்துள்ளார். இம்மாதம் 14ஆம் தேதி ரஷ்யாவில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் இரவு குரோவே‌ஷியா வுடன் நட்புமுறைக் காற்பந்து ஆட்டத்தில் பிரேசில் மோதியது. காயம் காரணமாக மூன்று மாதகாலம் ஓய்வில் இருந்தபின் நெய்மார் களம் கண்ட முதல் ஆட்டம் இதுதான். இந்த ஆட்டத்தில் நெய்மார் 69வது நிமிடத்திலும் ஃபிர்மினோ கூடுதல் நேரத்திலும் அடித்த கோல்களால் பிரேசில் 2=0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின் பேசிய நெய்மார், "நான் மிகவும் நேசிக்கும் காற்பந்து ஆட்டத்தை மீண்டும் விளையாட முடிந்ததில், அதிலும் கோலுடன் திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி," என்று சொன்னார்.

இடைவேளைக்குப் பின் களமிறங்கியபோதும் அணியின் முதல் கோலை அடித்ததால் நட்சத்திர வீரர் நெய்மாரை கொண்டாடும் சக பிரேசில் காற்பந்து ஆட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

மேலும்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!