மட்ரிட்: சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான நட்புமுறைக் காற்பந்து ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது. ஆட்டத்தில் வெற்றி கைநழுவிய போதும் தொடர்ந்து 19 ஆட்டங் களாக தோல்வியே காணாத அணியாக ஸ்பெயின் திகழ்ந்து வருகிறது. லா லீகா அணிகளில் ஒன்றான ரியால் சோஷியடாட் அணிக்காக விளையாடி வரும் அல்வாரோ ஒட்ரியஸே„லா 29வது நிமிடத்தில் அடித்த கோல் மூலம் ஸ்பெயின் முன்னிலை பெற்றது.
தேசிய அணிக்காக தாம் ஆடிய 3வது ஆட்டத்திலேயே, கோல் பகுதியின் ஓரத்தில் இருந்து அவர் இந்த அருமையான கோலை அடித்தார். முற்பாதி முடியும் தறுவாயிலும் பிற்பாதியின் தொடக்கத்திலும் அனுபவ வீரர் ஆண்ட்ரெஸ் இனி யஸ்டாவுக்கு இரு கோல் வாய்ப்புகள் கிடைத்தன. ஆயினும், சுவிட்சர்லாந்து கோல்காப்பாளர் சோமர் அவற்றை அற்புதமாக முறி யடித்துவிட்டார்.