லிஸ்பன்: உலகின் முன்னணி காற்பந்து ஆட்டக்காரர்களில் ஒரு வரான போர்ச்சுகலின் கிறிஸ்டி யானோ ரொனால்டோ, 33 (படம்), உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு ஆயத்தமாகி வருகிறார். ரியால் மட்ரிட் குழுவிற்கு சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்று தந்த கையோடு ஒரு வார காலம் ஓய்விலிருந்த ரொனால்டோ, தலைநகர் லிஸ்பனில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் சக போர்ச்சுகல் ஆட்டக்காரர்களுடன் நேற்று முன் தினம் இணைந்துகொண்டார்.
உலகின் சிறந்த காற்பந்து வீர ருக்கான 'பாலன் டி'ஓர்' விருதை ஐந்து முறை வென்றவரான ரொனால்டோவுக்கு உலகம் முழு வதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அத்துடன், ஊட கங்களும் அவரைப் பற்றி செய்தி வெளியிடுவதில் ஆர்வம் காட்டு வது வழக்கம்.