அடுத்த வாரம் தொடங்கவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை 55 சமூக மன்றங் களில் ரசிகர்கள் கண்டு மகிழ மக்கள் கழகம் ஏற்பாடு செய்து உள்ளது. மொத்தமுள்ள 64 போட்டிகளும் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஜூன் 14ஆம் தேதி இரவு 11 மணிக்கு நடைபெறவுள்ள தொடக்க ஆட்டம் 'அவர் தெம்பனிஸ் ஹப்'பிலும் 40 சமூக மன்றங்களிலும் காண்பிக் கப்படும். மற்ற போட்டிகள் எல்லாம் பல்வேறு சமூக மன்றங்களிலும் 'அவர் தெம்பனிஸ் ஹப்'பிலும் ஒளிபரப்பப்படும்.
சில சமூக மன்றங்களில் காற் பந்து தொடர்பான நடவடிக்கை களிலும் ரசிகர்கள் பங்கேற்க லாம். இவற்றுள் மேசைக் காற்பந்து, 'ஃபுட்பால் டிரை அவுட்' ஆகிய போட்டிகளில் முறையே பெக் கியோ, சிராங்கூன் சமூக மன்றங் களில் குடியிருப்பாளர்கள் பங்கு கொள்ளலாம்.