காற்பந்து: வெற்றி பெற முடியாமல் தவிக்கும் ரஷ்யா

இவ்வாண்டு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகளை ஏற்று நடத்துகிறது ரஷ்யா. அனைத்துலக காற்பந்து சங்கமான ஃபிஃபா தரவரிசையில் 66வது நிலையில் தேங்கிக் கிடக்கும் ரஷ்யா, நட்புமுறை ஆட்டங்களில் வெற்றி பெற முடியாத நிலையை தொடர்ந்து சந்தித்து வருகிறது. இந்த நிலை நேற்று அதிகாலை நடைபெற்ற துருக்கியுடனான ஆட் டத்திலும் தொடர்ந்தது-. இதில் ஒரே ஒரு ஆறுதல் என்ன வென்றால், நேற்றைய ஆட் டத் தில் ரஷ்யா அணி இவ் வாண்டு முதன்முறையாக தோல்வியை தவிர்த்தது.

இதற்கு முன் பிரேசில், பிரான்ஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகளுடனான ஆட்டங் களில் ரஷ்யா தோல்வியையே சந் தித்து வந்துள்ளது குறிப்பிடத் தக் கது. நேற்றைய ஆட்டத்தின் 36ஆம் நிமிடத்தில் அலெக்சாண்டர் சமேடாவ் (படம்) மூலமாக கோல் போட்டு முன்னிலை பெற்றது. ஆனால், துருக்கிக்கு மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய யூனுஸ் மாலி ஆட்டத்தின் 60ஆம் நிமிடத்தில் தமது நாட்டின் சார்பாக கோல் போட்டு ஆட்டத்தை சமன் செய்தார்.

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!