பிரஸ்ஸல்ஸ்: இவ்வாண்டு ரஷ்யா வில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில் போட்டியில் தன்னம்பிக்கையுடன் காலெடுத்து வைக்கவுள்ளது பெல்ஜியம் அணி. பெல்ஜியத்தின் தலைநகரமான பிரஸ்ஸல்சில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற நட்புமுறை ஆட்டம் ஒன்றில் எகிப்து அணியை 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது பெல்ஜியம். இந்த ஆட்டத்தில் பெல்ஜி யத்தின் வெற்றிக்கு வித்திட்டவர்க ளில் ஒருவர் செல்சி அணியைச் சேர்ந்த ஈடன் ஹசார்ட். ஆட்டத் தின் 27வது நிமிடத்தில் கோல் போடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார் ஹசார்ட்.
அடுத்த வாரம் ரஷ்யாவில் தொடங்கவுள்ள உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியை முன்னிட்டு பெல்ஜியம், எகிப்து அணிகள் பொருதிய நட்புமுறை ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் இரண்டாவது கோலை அடித்தார் ஈடன் ஹசார்ட். படம்: ஏஎஃப்பி